மதுராந்தகம், ஜூலை 7-
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சூனாம் பேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் செயல் பட்டு வரும் தபால் நிலையத்தில் வியாழனன்று (ஜூலை 6) வழக்கம்போல் பணி செய்து விட்டு தபால் நிலைய அலுவலர் ஜெயப்பிரியா நிலையத்தை மூடி சென்றுள்ளார்.
இந்நிலையில் வெள்ளியன்று காலை பொதுமக்கள் தபால் நிலையம் உடைக்கப்பட்டதை கண்டு ஜெயபிரியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஜெயப்பிரியா தபால் நிலையத்தின் பூட்டுகள் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த55 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது, மேலும் தபால்நிலையம் அருகே இருந்த தனியார் தபால் கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். உள்ளே பணம் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டு சென்றனர். தகவல் அறிந்து வந்த சூனாம்பேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.