districts

img

விளம்பர தூதரானார் போலோ விளையாட்டு வீரர்

விளம்பர தூதரானார்  போலோ விளையாட்டு வீரர் சென்னை, பிப்.25- இந்திய போலோ அணியின் தலைவரும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடுத்பத்தை சேர்ந்தவருமான சவாய் பத்மநாப் சிங் யுஎஸ் போலோ அசோசியேஷன் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தொழில்முறையாக போலோ விளையாட்டு வீரராகவும் திகழ்கிறார். இந்திய தேசிய அணியின் தலைவராக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தாய்லாந்து, யுனைடெட் கிங்டம், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.