districts

img

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முற்றுகை போராட்டம் வெற்றி! ரூ.114 கோடி பாக்கியை வழங்க நிர்வாகம் வாக்குறுதி

விழுப்புரம், பிப்.6- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து, ஆலைக்கு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.114 கோடியை விரைவாக வழங்குவதாக ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது. மாநில அரசின் ஆதரவு விலை ரூ.101 கோடி மற்றும் 2004-2005 மற்றும் 2008-2009 ஆம் ஆண்டுக்கான லாபத்தில் 50 விழுக்காடு பங்கு தொகையான ரூ. 13 கோடி என மொத்தம் 114 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் பிப். 6 அன்று முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சங்கத்தின் கவுரவத் தலைவர்  ஆர்.ராமமூர்த்தி  முன்னாள் எம்எல்ஏ தலைமையில் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை முற்றுகையிட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்றனர்.  அப்போது, அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்ட ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட காவலர்கள் தடுத்து நிறுத்தினர். பிறகு, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஆலை நிர்வாகமும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகம் சார்பாக வந்த அதிகாரி கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.ராமமூர்த்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், ஒரு வாரத்திற்குள் பாக்கித் தொகையை கொடுத்து விடுவதாக உறுதியளித்தார். இதையடுத்து,  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வேல்மாறன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகிகள் மாவட்டச் செய லாளர் ஆர்டி.முருகன், மாவட்டத் தலை வர் ஆர்.தாண்டவராயன், மாவட்டப் பொரு ளாளர் பி.சிவராமன், மாநிலக் குழு உறுப்பினர் வி.கதிரேசன், மாவட்டத் துணைத் தலைவர் கோ.மாதவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.