districts

img

எஸ்ஆர்எம் முதல்வர் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு, ஆக.1-

     எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக (டீன்) டாக்டர் நிதின் மதுசூதனன் நகர்கர் பொறுப்பேற்றார்.

    சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய  முதல்வராக (டீன்) மருத்துவர் நிதின் மதுசூதனன் நகர்கர் நியமிக்கப்பட்டார். அவர், திங்களன்று (ஆக.1) பொறுப்பேற்றார்.  பணியில் நோயாளிகளின்  நலன், மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தனது செயல்பாடு உச்சம் தொடும் அளவிற்கு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னையில் இவ்விழா ஒத்திகைக்காக 4, 10, 13ம் தேதிகளில், காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை யில்  போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக போக்கு வரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.