சென்னை, மார்ச் 20- சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் (சிமாட்ஸ்) பல்கலைக்கழக 22வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழா பட்ட தாரி மாணவர்களின் பல வருட கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கல்வி சாதனை ஆகியவற்றின் உச்சக்கட்டத்தை குறிக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி யாகும். பட்டமளிப்பு விழா வில் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குனர் ஜெனரல் ரிச்சர்ட் சி.எல் சென் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்ட மளிப்பு உரை ஆற்றினார். ஐதராபாத் சிஎஸ்ஐஆர் இயக்குனர் டாக்டர் வினய் கே நந்திகூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். இப்பலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் என்.எம். வீரையன் விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மருத்துவம், பல் மருத்து வம், செவிலியர், பொறியி யல், சட்டம், மேலாண்மை, பிசியோ தெரபி, எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 474 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.