சென்னை தி.நகரில் உள்ள நவபாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில்அணிவகுத்து வரும் அபூர்வ நிகழ்வை மாணவர்கள் கண்டு களித்தனர். சென்னை ஆஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம் (டிஏஏஎஸ்) தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தமிழ்நாடு மாநில கவுன்சில், கலாமின் ஸ்கை அப்சர்வர்ஸ் மற்றும் அறிவியல் பலகை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.