districts

img

நூறு நாள் வேலையை தொடங்க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் சோரப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட விநாயகம்பட்டு கிராமத்திற்கு 100 நாள் வேலைத்திட்டத்தை உடனடியாக துவங்க வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநிலக்குழு உறுப்பினர் சிவசங்கரி, சாமிக்கண்ணு ஆகியோர் புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி தயானந்த் டெண்டுல்கரை சந்தித்து வேலையை துவங்க மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்டு வேலை தூங்குவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக தலைவர்களிடம் அதிகாரி உறுதி அளித்தார்.