districts

img

புதுச்சேரி நகராட்சி வெண்டிங் கமிட்டி தேர்தல்: சிஐடியு வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி, செப். 20-  புதுச்சேரி நகராட்சி சார்பில் சாலை யோர வியாபாரிகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான நகர விற்பனைக்குழு (வெண்டிங் கமிட்டி) தேர்தல் அக்டோபர் 3ஆம் தேதி கம்பன் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. 12 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 2,500 க்கும் மேற்பட்ட சாலையோர வியா பாரிகள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை (செப்.20) நடை பெற்றது.  புதுச்சேரி கடற்கரை அருகில் ரோமன் ரோலண்ட் வீதி சந்திப்பில் உள்ள நக ராட்சி வருவாய் பிரிவு அலுவலகத்தில் நடை பெற்ற வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்கு, சிஐடியு சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் தலைவர் அழகர்ராஜ் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்யும் சிஐடியு பிரதிநிதிகளை வாழ்த்திப் பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜாங்கம், வெ.பெரு மாள், கொளஞ்சியப்பன், நகர கமிட்டி செய லாளர் ஜோதிபாசு, சிஐடியு மாநிலத் தலை வர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், சாலை யோர வியாபாரிகள் சங்க செயலாளர் வடி வேல், நிர்வாகிகள் அந்தோணிகுருஸ், கெம்புராஜ், வீரமணிகண்டன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பழைய சட்டக் கல்லூரி எதிரில் இருந்து ஊர்வலமாக வந்த சிஐடியு வேட்பாளர்கள், நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரியிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.