தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.