இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவர் தோழர் வைரமுத்து சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மத்திய சென்னை மாவட்டம் சார்பில் வியாழனன்று (செப்.18) டி.பி.சத்திரத்தில் மாவட்டச் செயலாளர் ஐ.அபெல் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் வி.ஜானகிராமன், மாவட்டத் தலைவர் கே.முருகன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், டி.சுகுமார் (வீட்டு வேலை சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.