districts

img

காணும் பொங்கல்: களைகட்டியது பிச்சாவரம்

சிதம்பரம், ஜன.17- சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் காணும் பொங்கலையொட்டி மக்கள் கூட்டம்  வழக்கத்தை விட அலை மோதியதால் களை கட்டியது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் உள்ளது பிச்சாவரத்தில் சுற்றுலா மையம். இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சதுப்பு நில காடுகள் அமைந்துள்ளது. உப்பணாறு கடலும் ஒன்று கூடும் இடத்தில் காடுகள் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்தில்  சுரபுன்னை மரங்கள் தில்லை மரங்கள், வெண்கண்டை  உள்ளிட்ட பல்வேறு மூலிகை மரங்கள் அதிக அளவில் உள்ளது. பிச்சாவரம் சதுப்பு நில காடுகள் பல நூறு கிளை  வாய்க்கால்களில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள தால் இங்கு தினந்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி யூர், வெளி மாநிலம், வெளி நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வந்து சதுப்பு நிலக்காடுகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றனர். இதில்  குறிப்பாக விடு முறை நாட்களில் சுற்றுலா மையத்தில் பயணிகள் கூட்டம்  அதிகமாக இருக்கும். இந்த நிலை யில் பொங்கல் பண்டிகை யையொட்டி தொடர் விடு முறை விட்டதால் சுற்றுலா மையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை (ஜன.17) காணும் பொங்கல் என்ப தால் காலை முதல் மாலை வரை அதிக அளவு பொது மக்கள் சுற்றுலா மையத்திற்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அப்போது பலர் அவர்களின் செல்போன்க ளில்  குடும்பத்துடன் சுயப் படம் மற்றும் புகைப்படங் களை எடுத்து மகிழ்ந்தனர். உள்ளூர் மற்றும்  வெளி யூர்களில் இருந்து குடும்ப த்துடன் வந்து காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடி படகு சவாரி செய்தது  பிச்சாவரம் சுற்றுலா மையம் காணும் பொங்கல் களை கட்டியது போல் இருந்தது.