மானிய விலையில் பிங்க் ஆட்டோ
மானிய விலையில் பிங்க் ஆட்டோ சென்னை,அக்.6- சென்னையில் இளஞ்சிவப்பு நிற (பிங்க்) ஆட்டோக்கள் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்ய பெண்களுக்கான உதவி எண், ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு காவல் துறை மூலம் கண்காணிக்கும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ நடைமுறைப் படுத்தப்படும். வாகனம் இயக்க லைசென்ஸ் இருக்கும் ஆட்டோ ஓட்ட ஆர்வம் உடைய 200 பெண்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, பிங்க் ஆட்டோ வாங்க அதன் மொத்த விலையில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் மானியமாக அளிக்கப்படும். கடன் உதவியாக வங்கிகளுடன் இணைக்கப்படுவர் என தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்து இருந்தார். 200 பெண் பயனாளிகள் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்தவும் சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.
நடைபாதை வியாபாரிகளிடம் சுங்கம் வசூல்: ஓசூர் மாநகர ஆணையர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி, அக்.6- ஓசூர் மாநகராட்சியில் சிறு கடை, தள்ளுவண்டி, தரைக்கடை, நடைபாதை கடை, தலைசுமை வியாபாரம் செய்து வருபவர்களிடம் பல தனி நபர்கள் தண்ட வசூல் போல் மிரட்டி சுங்க வரி என கணக்கற்ற பணம் தினமும் வசூ லித்து வந்தனர். இதை எதிர்த்து ஓசூர் நடை பாதை வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது. இதுகுறித்து மாநகராட்சிக்கும், சாராட்சியருக்கும் தொடர்ந்து புகார் மனுக்களை கொடுத்து வந்தது. இந்த நிலையில், நடைபாதை கடை வியாபாரம் செய்பவர்களிடம் முறை கேடாக சுங்கம் வசூலித்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர ஆணையர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நடைபாதை கடைகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் மாநகராட்சி தரப்பிலிருந்து தனிநபர் எவருக்கும் வழங்கப்படவில்லை.முறைகேடாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நபர்கள் குறித்து பொதுமக்கள் ஓசூா் மாநகராட்சிக்கு அலுவலக தொலைபேசி எண் 04344-247666 வாயிலாக உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.