districts

img

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை,டிச.21- பண்டிகை மற்றும் தொடர் விடு முறையை முன்னிட்டு பயணிகள் வசதி க்காக போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.  இது குறித்து விரைவுப் போக்கு வரத்து கழக மேலாண் இயக்குநர் வெளி யிட்ட அறிக்கையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக் குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு மற்றும் இதர ஊர்களு க்கும் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் (கோவை, சேலம், கும்பகோணம், மதுரை மற்றும் நெல்லை) மூலம் தின சரி இயக்கக்கூடிய 2,100 பேருந்து களுடன் கூடுதலாக 640 சிறப்பு பேருந்து  களை அடுத்த இரு நாட்களுக்கு இயக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள், www.tnstc.in இணைய தளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி ஆகியவற்றின் வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.