districts

img

மேற்கு காவல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை, ஆக.24-

      செங்கம் சாலை ஆணாய் பிறந்தான் கிராமத்தில், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

      வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.