districts

ஓணம் பண்டிகை விமான கட்டணம் அதிகரிப்பு

சென்னை,ஆக.25-

      ஓணம் பண்டிகை வரும் 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், பெருமளவு விமானங்களில் கேரளாவுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதையடுத்து விமான கட்டணங்களும் 3 மடங்குஉயர்ந்துள்ளன.

     சென்னை-திரு வனந்தபுரம் வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.19,089 வரை. சென்னை-கொச்சி வழக்க மான கட்டணம் ரூ.2,962. தற்போதைய கட்டணம் ரூ. 6,500 முதல் ரூ.10,243 வரை. சென்னை-கோழிக்கோடு, வழக்கமான கட்டணம்-ரூ.3,148 ஆகும்.