districts

img

பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

திருவள்ளூர், செப் 4- பாலியல் குற்றவாளிகள் மீது மாவட்ட ஆட்சியர் சட்ட ரீதியான கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்   என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி யுள்ளனர்.  திருவள்ளூர் மாவட்ட த்தில் பரவலாக பெண்கள் மற்றும் பெண் குழந்தை கள் மீது கூட்டு பாலியல் வன்முறை, பாலியல் பலாத்காரங்கள் அதி கரித்து வருகிறது. குறிப்பாக திருத்தணி, கிருஷ்ண சமுத்திரத்தை சேர்ந்த இளம் பெண்  கடந்த ஜன வரி மாதம்12 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சம்மந்த மான குற்றவாளியை கைது செய்ய பல முறை புகார் அளித்தும் திருத்தணி  காவல் நிலைய அதிகாரி கள் இது வரையில் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை.  திருவள்ளூர் சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை பட்டப்பகலில் அடித்து துன்புறுத்திய நபரை கைது செய்யக் கோரி பல முறை போராடிய பின்பு தாலுக்கா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வாய் கண்டிகையில் 86 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்ச்சி செய்ய  ஒருவர் முயன்றார். இப்படி அடுக்கடுக்காக நிறைய பாலியல் வன்முறைகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடை பெற்றுள்ளது.  இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் ஊரக வாழ்வதார இயக்கத்தில் பணிபுரியும் பெண்களிடம்,  வட்டார இயக்க மேலாளராக பணிபுரிபவர் தனக்கு கீழ் பணி புரியும் பெண்களை  பாலியல் ரீதியாக சீண்டு கிறார் என்பதற்காக,  பாதிக்கப்பட்ட பெண் மாதர் சங்கத்திடமும் புகார் அளித்தார். இதற்காக கடந்த மாதம் ஆக 20  அன்று திருவள்ளூர் டோல்கேட் அருகில் மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த சம்பத்திலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதுகுறித்துமாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் விரக்தியில் உள்ள னர். மக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே பாலி யல் குற்றவாளிகள் மீது பெண்க ளுக்கு எதிரான வன்முறை கள் மீதும்  காவல்துறை நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று மாதர்சங்கம் வலி யுறுத்தியுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு பாது காப்பும், பள்ளி விடும் நேரங்களில் காவலர்கள் ரோந்து செல்ல வேண்டும், மக்கள் அதிகமாக புழங்கும் இடங்களில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை  கண்காணித்து தடுக்க வேண்டும். அவர்களிட மிருந்து  பெண்களை பாது காக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர் கவனம் செலுத்த வேண்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்த்தின் சார்பில் புதனன்று (செப் 3), மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இ.மோகனா, மாவட்டத் தலைவர் பி.சசிகலா, மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா பொருளாளர் எஸ்.ரம்யா, மாவட்ட துணைத் தலைவர் என்.கீதா, மாவட்ட துணைச் செய லாளர் இ.கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.