சென்னை,செப்.20– சென்னை உயர்நீதி மன்றம் அருகே சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மீண்டும் அமைக்க வேண்டும் சென்னை சட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டம் சார்பில் சட்ட மாணவர்கள் சிறப்பு மாநாடு சனிக்கிழமையன்று (செப். 20) பாரிமுனையில் நடைபெற்றது. தலைவர் பெ.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சட்ட மாணவர் ஆ.அமர்நீதி வர வேற்றார். மாநிலப் பொதுச் செயலாளர் ச.சிவக்குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். அறிக்கையை மாவட்டச் செயலாளர் பா.சீனிவாசன் சமர்பித்தார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேராசிரியர் செ.ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் தொ.சம்சீர் அகமது வாழ்த்திப் பேசினார். விடுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கல்லூரிகளில் ஊடுருவியுள்ள போதைக் கலாச்சாரம் மற்றும் பாலி யல் சீண்டல்களை தடுக்க வேண்டும், மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், அகில இந்திய பார் கவுன்சில் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 27 பேர் கொண்ட மாவட்ட உப குழுவின் ஒருங்கி ணைப்பாளராக ஆ.அமர் நீதி தேர்வு செய்யப்பட்டார்.