districts

img

மலேசியாவில் தொழில் வணிக கருத்தரங்கம்

சென்னை, நவ. 5- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இளம் தொழில் முனைவோர் அமைப்பு துவங்கப்பட்டது. தமிழகத்தில் இளம் தலைமுறையை தொழில் வணிகப் புரட்சியில் ஈடுபடுத்தும் நடவடிக்கையாக இளைஞர்களுக்கு சுய தொழில் அடிப்படையில் தற்சார்பு வணிகத்துறைகளில் ஈடுபடுத்தவும், பெருகிவரும் வேலைவாய்ப்பின்மையை குறைத்திடவும், புதிய வணிக வாய்ப்பு களை உருவாக்கிடவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பொருளாதார மீட்புக்கு உத விடவும், புதிய நிதி ஆதாரங்களை பெருக்கிட வும், அயல்நாட்டு முதலீடுகளை ஈர்த்திடவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.  மலேசியாவில் சிலாங்கூரில் சேம்பர்ஆப் காமர்ஸ் நடத்திய உலகளாவிய தொழில் வணிக கருத்தரங்கில் பேசிய வணிகர் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா,  தமிழகத்தின் இளம் தொழில்  முனைவோர் அமைப்பிற்கான அவசியத்தை யும், பரஸ்பர தொழில்நுட்ப பரிமாற்றத் திற்கும் இந்த நிகழ்வு பெரிதும் பயன்படும் என்றார்.    மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, மாநிலப் பொரு ளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர் அமைப்பு நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தலைவர் சண்முகநாதன் இளம் தொழில் முனைவோர்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

;