விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஹவுசிங் போர்டு மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரியும், கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தியும், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பார்த்திபன் தலைமையில் மனு அளித்தனர். உடன் முன்னாள் மாவட்டத் தலைவர் கண்ணதாசன், மாவட்ட குழு உறுப்பினர் சதீஷ்குமார், நிர்வாகிகள் சச்சின், ஜார்ஜ், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.