districts

கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி உயர்வு சட்டப்பேரவையில் அமைச்சர் காந்தி அறிவிப்பு

சென்னை,ஏப்.12- கைத்தறி சங்க நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி கூறினார். சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதத்திற்கு பதில் அளித்து பேசுகையில் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு  கைத்தறி பட்டு பூங்கா அமைக்கப்படும். அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்த மாபெரும் ஜவுளி நகரம் ஒன்று பொது தனியார் கூட்டாண்மையின் அடிப்படையில் சென்னையில் அமைக்கப் படும். தமிழ்நாட்டில் செயல்படும் அண்ணா கூட்டுறவு நூற்பாலை, ஆண்டிப்பட்டி மற்றும் எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலை  ஆகிய நூற்பாலைகளில் தலா 0.999 மெ.வா. திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி  நிலையங்கள் நிறுவப்படும்.  இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும். சேமிப்பு மற்றும் பாது காப்பு திட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் சந்தா செலுத்த வேண்டிய கால அளவு 25 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக குறைக்கப்படும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்க ளில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள்  இயற்கை மரணமடையும் போது வழங்கப்படும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்கள் மிகுதியாக உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். கைத்தறி நெசவாளர்க ளுக்கு 3,006 தறிகள், உபகரணங்கள் வழங்கு தல் மற்றும் 56 நெசவாளர்களுக்கு தறிக் கூடங்கள் அமைத்து தரப்படும் என்றும் அவர்  கூறினார்.

பொது வணிகச் சின்னம்
கைத்தறி நெசவுக்கு பயன்படுத்தப்படும் சிட்டா நூல் சாயம் இடும் முறைக்கு பதிலாக  நவீன முறையில் சாயம் இடும் சாத்திய  கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் படும். தமிழ்நாட்டின் கைத்தறி தயாரிப்பு களுக்கான பொது வணிகச் சின்னம் மற்றும் தொகுப்பாக்கல் உருவாக்கப்படும். கைத்தறி ரகங்களை காட்சிப்படுத்தவும் மற்றும் சந்தைப்படுத்தவும் ஏதுவாக 4 மெட்ரோ நகரங்களில் (சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லி) வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடத்தப்படும். என்றும் அமைச்சர் காந்தி கூறினார்.

;