districts

img

இதயநோய் விழிப்புணர்வு மனித சங்கிலி

சென்னை, செப்.23– உலக இதய தினத்தை யொட்டி சென்னை கொட்டி வாக்கத்தில் புரோமெட் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனிதசங்கிலி நடைபெற்றது. மருத்துவமனையில் துவங்கிய மனித சங்கிலி கொட்டிவாக்கம் மற்றும் திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறையி னருக்கான இலவச இதய நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை போக்குவரத்து கூடுதல் காவல்துறை ஆணையர் ஆர். சுதாகர் துவக்கி வைத்தர். இதில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மற்றும் தலைமை இதய நோய் நிபுணர் டாக்டர் அருண் கல்யாண சுந்தரம் ஆகியோர்  இதில் கலந்து கொண்டனர்.