அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு சென்னை பெருநகர சுமைப்பணி தொழிலாளர் சங்கம், அம்பத்தூர் டாஸ்மாக் 1, 2, 3 குடோன் சங்க கிளைகள் சார்பில் கூட்டம் நடைபெற்றது. சுமைப்பணி சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் இரா.அருள்குமார், மாவட்ட துணைத் தலைவர் ஜி.கோதண்டன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.