சிதம்பரம், டிச.22- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு கலைக் கல்லூரிகளுக்கு தேர்வு கட்ட ணம், அரியர் கட்டணம், சான்றிதழ் பெறு வதற்கான கட்டணம், மறுமதிப்பிடு கட்ட ணம் உள்ளிட்ட கட்டண உயர்வை கண்டித்து சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திங்களன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலை பல்கலைக்கழகம் உயர்த்திய அனைத்து கட்டணத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாண வர் சங்க கிளை செயலாளர் அன்பு தலை மையில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சிவநந்தினி உரையாற்றினார். கிளை நிர்வாகிகள் மகேந்திரன், திருநாவுக்கரசு, சுஜி, ஹரி, ஆகாஷ், பாலா, பிரேம், அஷ்வின், உதய குமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கட்டண உயர்விற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
