tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி

அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தேர்தலைச் சந்திக்க முழுமையாகத் தயாராக இருக்கிறோம். கேரளாவைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி  ஏற்கனவே 99% தொகுதி பங்குகீடு, வேட்பாளர் அறிவிப்பு பணி முடித்துவிட்டது. அதனால் தேர்தல் தேதி அறிவிப்பு தங்களுக்கு எந்தத் தயக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெற்றியை நோக்கித் தயாராக இருக்கிறோம்.

சிபிஐ எம்.பி., சந்தோஷ்

கேரளத்தில்  இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். இதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேலும் தீவிரப்படுத்தத் தொடங்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சுவங்கர் சர்க்கார்

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு, சுமார் 60 லட்சம் பெயர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால் பெரும் ஆபத்து ஏற்படும்.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

சுமார் 6 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுவிக்கப்பட்ட போதிலும், மற்ற ஆர்வலர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.