காஞ்சிபுரம், ஜூன் 1 - தாய்லாந்தில் நடை பெற்ற யோகா போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர் கார்த்திக் நாரா யணன் தங்கபதக்கம் வென்று சாதனை படைத் துள்ளார். தாய்லாந்தின் பாங்காங் கில் 3ஆவது சர்வதேச யோகா விளையாட்டு போட்டி அண்மையில் நடை பெற்றது. இதில் தென் கொரியா, ஸ்ரீலங்கா, வியட் நாம், தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா உட்பட 9 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற காஞ்சிபுரம் சிஷ்ய யோகா மையத்தின் மாணவர் கார்த்திக் நாரா யணன் 12 வயதுக்கு உட்பட் டோருக்கான பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்திய தூதரக உறுப்பினர் முத்து உட்பட பலரும் வாழ்த்து தெரி வித்தனர்.