கடலூர், செப்.4 - கடலூர் - புதுச்சேரி எல்லை யில் புதுக்கடை என்ற தமிழக பகுதியில் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரு கிறார். இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து தேங்காய் மட்டைகள் கொண்டு வந்து சேர்த்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த தேங்காய் மட்டையில் இருந்து தேங்காய் பஞ்சுகள் உற்பத்தி செய்வதும் அந்த பஞ்சில் இருந்து கயிறு உற்பத்தி செய்யும் பணியும் நடைபெற்று வரு கிறது. வியாழக்கிழமை (செப்.4) பிற்பகல் திடீரென அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் பஞ்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீ மளமளவென பரவி அருகில் இருந்த தேங்காய் மட்டைகள் மற்றும் கயிறு, கயிறு தயாரிக்கும் இயந்திரங்கள் என அனைத்து பகுதி களுக்கும் பரவியது. இந்த தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். கடலூர் மற்றும் புதுவை பகுதியில் இருந்து வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இருந்தாலும் தேங்காய் பஞ்சில் கட்டுக் கடங்கா மல் தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய தேங்காய் பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.