districts

img

சாமந்தி பூ விலை சரிவு: விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி,செப்.19- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம்,ராயக்கோட்டை சூளகிரி, காவேரிப்பட்டினம் பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பில் சாமந்தி வைக்கப்பட்டு கடந்த பருவங்களை விட தற்போது அதிகமாக பூத்துக் குலுங்குகிறது. எப்போதும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை உள்ளிட்ட விழா காலங்களில் சாமந்தி பூ ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகும். சாதாரண காலங்களில் ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகும். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி முன்பிருந்தே விலை சரிந்த நிலையில் குறைந்தபட்சம் கிலோ 20,30 ரூபாய்க்கு விற்கும் என எதிர்பார்த்த நிலையில் வியாபாரிகள் கிலோ 5 க்கும் 10 க்கும் பேரம் பேசுகிறார்கள். சாமந்தி பூ விவசாயத்துக்கும்,வேலை செய்த ஆட்களுக்கும் செலவழித்த முதலாவது கிடைக்கும் என சில நாட்களுக்கு முன்பு எதிர்பார்த்த நிலையில் தற்போது நட்டத்திற்கு விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என  தேன்கனிக்கோட்டை சந்திரசேகர், மத்திகிரி சீனிவாசன் மற்றும் பல சாமந்திப்பூ சாகுபடி விவசாயிகள் விநாயகர் சதுர்த்தியில் வேதனையுடன் தெரிவித்தனர்.