districts

img

சிபிஎம் போராட்ட எதிரொலி மாற்று இடம் வழங்க வட்டாட்சியர் உறுதி

விழுப்புரம், ஜூன் 6-

     விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் வட்டத்திற்குட்பட்ட செவலபுரையில் அரசு கோயில் புறம்போக்கு இடத்தில் சுமார் 60  ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த குடியிருப்பை நீதிமன்ற உத்தரவை காட்டி இடித்தனர். ஆனால் ஒரு ஆண்டுகள் கடந்த பின்பும் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு அதிகாரிகள் மாற்று இடம் வழங்கவில்லை.

    எனவே அளித்த உறுதிமொழி யின்படி மாற்று இடம் வழங்க வேண்டும். மாற்று இடம் வழங்கா மல் அலட்சியமாக உள்ள அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பத்துடன் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் டி.முருகன் தலைமையில் செவ்வாயன்று (ஜூன் 6)  குடியேறும் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

   முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், “செவலபுரை கிராமத்தில் குளத்து மேடு புறம்போக்கில் கடந்த 60  ஆண்டுகளுக்கு மேலாக மூன்று  தலைமுறையாக சுமார் 93 குடும்பத் தினர் வீடு கட்டி நிரந்தரமாக குடியிருந்து வந்தனர்.  

    நீதிமன்ற உத்தரவை காட்டி  கடந்த ஓராண்டுக்கு முன்பு அதி காரிகள் அந்த குடியிருப்புகளை இடிக்க வந்தனர். அப்போது கட்சி  தலையிட்டு மாற்று இடம் வழங்கி  விட்டு இடிக்க வேண்டும் என வலி யுறுத்தியது. மேலும் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன.

  அதையொட்டி அன்று வீடுகளை  இடிக்காமல் திரும்பி சென்றவர்கள், கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற உத்தரவை காட்டி வீடுகளை இடிக்க வந்தனர், அப்போது அங்கு திரண்ட சிபிஎம் கட்சியினர் மீண்டும் பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு மாற்று இடம்  கொடுத்து விட்டு இடிக்க வேண்டும்  என வலியுறுத்தினர். அப்போது திண்டிவனம் சார் ஆட்சியர், செஞ்சி  டிஎஸ்பி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் சிபிஎம் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாதிக்கப்படு பவர்களுக்கு மாற்று இடம் கொடுப்பதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்து விட்டு, வீடுகளை இடித்தனர்.

   நீதிமன்ற உத்தரவை மதித்து போராட்டத்தை கைவிட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங் கப்படும் என காத்திருந்தோம். பாதிக்கப்பட்ட வர்கள் கடந்த ஒரு ஆண்டாக பள்ளி, அங்கன்வாடி உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் தங்கி வருகின்றனர். ஆனால் இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள அரசு கட்டிடங்களை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர். எனவே பேச்சுவார்த்தையில் அளித்த உறுதிமொழியின் படி மாற்று இடம் வழங்க வேண்டும்” என்றார்.

   முன்னதாக வட்டாட்சியருடன் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், வட்டாட்சியர் ஒரு சிலருக்கு மட்டும் மாற்று இடம் வழங்குவதாக கூறினார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என  வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்  துறையினர் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.ராதா கிருஷ்ணன், மூத்த உறுப்பினர் ஏ.உதயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் எழில்ராஜா, வட்டக் குழு  உறுப்பினர்கள் கே.ரவி உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத் திற்கு வந்த வட்டாட்சியர் வரும்  30ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக உறுதி அளித்தார்.