திருவள்ளூர், செப் 4- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகில் உள்ள ஆண்டார்மடம் பேரிடர் பாதுகாப்பு பல்நோக்கு மையத்தில் பேரிடர் பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இணைந்து நடத்திய இந்த பயிற்சியில் பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் புயல்,மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து பயிற்சி பெற்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனி வட்டாட்சியர் வாசுதேவன், பேரிடர் மேலாண்மை பயிற்றுநர்கள், தமிழ்நாடு பேரிடர் மற்றும் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறை, சுகாதார துறை அலுவலர்கள்,பொன்னேரி வருவாய் ஆய்வாளர் வேல்முருகன்உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.