புதுச்சேரி, செப்.4- புதுச்சேரியில் குடும்ப அட்டை இ.கே.ஒய்.சி பதிவிற்காக பொதுமக்கள் அலை கழிக்கப்படுவதை தடுக்கக் கோரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா. ராஜாங்கம், பிரபுராஜ் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசின் குடிமை பொருள் வழங்கல் துறையின் சார்பில் நுகர்வோர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டை யில் உள்ளவர்கள் தங்களை இ.கே.ஒய்.சி மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளி யானதிலிருந்து பொதுமக்கள், பொது சேவை மையங்களில் இ.கே.ஒய்சி பதிவிற்காக அலைக்கழிக்கப்பட்டு வரு கிறார்கள். குறிப்பாக நோயாளிகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மாற்று நடவடிக்கையை குடிமை பொருள் வழங்கல் துறை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, இது குறித்து ஆட்சியர் மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரி களிடம் தொடர்பு கொண்டு மாற்று நட வடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்.