districts

img

மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி பரங்கிப்பேட்டையில் சிபிஎம் போராட்டம்

சிதம்பரம், செப். 20-  பரங்கிப்பேட்டை அரசு மருத்துவம னையை தரம் உயர்த்த வலியுறுத்தி சிபிஎம் சார்பில்  நூதன போராட்டம் நடைபெற்றது. சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை பரங்கிப்பேட்டை நகரம், கிள்ளை, சாமியார்பேட்டை, கொத்தட்டை, பி.முட்லூர், பெரியகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டிடம் இடிக்கப்பட்டு 3 ஆண்டு கள் முடிந்தும் புதிய கட்டடம் கட்ட வில்லை, ஸ்கேன், எக்ஸ்ரே கருவிகள் இருந்தும் பயனில்லை, பல் மற்றும் கண் மருத்துவர் இல்லை, பொது அறுவை சிகிச்சை மருத்துவர், மகப்பேறு மருத்துவர் இல்லை. பிரசவம் பார்ப்பது மிகவும் குறை வாக உள்ளது. மயக்கவியல் மருத்துவர் இல்லை. சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. போதிய சுகாதார கழிப்பறைகள், இரவு காவலர்கள் இல்லை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் உடனடி யாக போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தி சிபிஎம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் காயத்திற்கு கட்டுபோட்டுக்கொண்டு நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய் தலைமை தாங்கி னார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, மாவட்டக் குழு உறுப்பி னர் அம்சயாள், நகரச் செயலாளர் வேல்முருகன், கட்சியின் மூத்த உறுப்பினர் கற்பனைச் செல்வம், முன்னாள் சிபிஎம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன், மண்டல பொறுப்பாளர் ஹசன் முகமது, பரங்கிப்பேட்டை பேரூராட்சி சிபிஎம் வார்டு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.