திருவண்ணாமலை, பிப். 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், கரும்பு விவசாயிகள் சங்கத் தின் மாநில துணைத் தலை வருமான எஸ். பலராமன் அண்மையில் உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளியன்று, திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி. கே. வெங்கடேசன் தலைமை தாங்கினார், விச மாவட்ட துணைத் தலைவர் ரஜினி ஏழுமலை வரவேற் றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் பேசியபோது, திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாயிகள் சங்க மாநாடு மற்றும் கட்சி மாநாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மிக சிறப்பாக இயக்கப் பணியாற்றியவர் தோழர் பலராமன். உயர்மின் கோபுர விவசாயிகளின் போராட்த்தின்போது நிவாரணம் பெற்று தந்த மாவட்டமாக திருவண்ணா மலை பெயர் பெற காரண மாக செயல்பட்டவர் பலரா மன் என்றும் அவர் கூறி னார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் பேசியபோது, திருவண்ணா மலை மட்டுமல்லது பக்கத்து மாவட்டங்களிலும் கரும்பு விவசாயிகளுக்காக, 8 வழி சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு உந்து சக்தியாக இருந்தவர் பலராமன். விவசாயிகள் சங்கம் நடத்தும் உழவன் உரிமைக்காக 100 ஆண்டு சந்தாக்களை வழங்கி சிறப்பித்த அவரை வழி காட்டியாக கொண்டு விவசாயிகள் பிரச்சனை களை தீர்த்து, விவசாயி களின் வாழ்வை செம்மைப் படுத்த பாடுபடுவோம் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் தோழர் பலராமன் படத்தை திறந்து வைத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியபோது, திருவண்ணா மலைக்கு வரும் செங்கொடி இயக்க தலைவர்களுக்கு பலராமன் எப்போதும் உறு துணையாக இருப்பார். தலைவர்களை வரவேற்று வழியனுப்பும் வரை உதவியாக உடன் இருப்பவர் தோழர் பலராமன், திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் பிரச்சினை, உயர்மின் கோபுர பிரச் சனைகள் மட்டுமல்லாது சாதாரண விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் போதும் அந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர். கட்சி அரசி யலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள், விவசாயி களின் உரிமைகளுக்காக களப்போராளியாக திகழ்ந்தவர் அவர் என்றார். நிகழ்வில், விவசாயிகள் சங்க நிர்வாகி முத்தகரம் பழனிச்சாமி, வேட்டவலம் மணிகண்டன், பெண்கள் இணைப்பு குழு சுமதி, வழக்கறிஞர் பாசறைபாபு, தவிச உதயகுமார் உள்ளிட்டோர் தோழர் பலராமன் நினைவு கூர்ந்து பேசினர். இந்த நிகழ்ச்சியில், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலை வர் எஸ். வேல்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம். பிரகலா தன், ஏ. லட்சுமணன், இரா.பாரி, கே. வாசுகி. பெரண மல்லூர் சேகரன், ப. செல் வன், டி. கே. வெங்கடேசன், விதொச மாவட்ட செய லாளர் கே. கே. வெங்கடே சன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், கட்சி மற்றும் பல்வேறு சங்க மாவட்டக் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மறைந்த தோழர் பலராமன் மகன் விஜய குமார் நன்றி கூறினார்.