டிஆர்இயூ உதவி கோட்ட செயலாளர் ஏ.பால்ஜிஜோனி பணி நிறைவு பாராட்டு விழா சென்னையில் புதனன்று (ஏப். 16) நடைபெற்றது. இதில் செயல் தலைவர் அ.ஜானகிராமன், பொதுச்செயலாளர் வி.அரிலால், தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் பால்ஜிஜோனி துணைவியார் ஜோதி, நிர்வாகிகள் செந்தில், மணிகண்டன், குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.