காஞ்சிபுரம், செப். 20- இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) காஞ்சி புரம் மாவட்ட 13 ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (செப்.20) தொடங்கியது. மாவட்ட மூத்தத் தலைவர் பி.ரமேஷ் செங்கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்பு நிர்வாகி கே.ஜீவா வரவேற்றார். வரவேற்பு குழுத் தலைவர் ஜி.வசந்தா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டத் தலைவர் டி. ஸ்ரீதர் தலை மையில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் இயக்கங் கள் மற்றும் ஸ்தாபன அறிக்கையை சமர்ப்பி த்தார். வரவு-செலவு அறிக் கையை பொருளாளர் எஸ்.சீனிவாசன் சமர்பித்தார். பேரணி இந்த மாநாட்டை யொட்டி, செங்தொண்டர் அணி வகுப்புடன் தொழி லாளர்கள் உரிமை முழுக்க பேரணி சங்கத்தின் அகில இந்திய, மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் அணிவகுக்க, மாநாடு நடை பெறும் மேட்டுத் தெரு ஏகேஜி திருமண மண்ட பம் அரங்கிலிருந்து புறப் பட்டது. நகரின் முக்கிய வீதி களின் வழியாக சென்று பொதுக்கூட்டம் நடைபெற்ற பேருந்து நிலையம் எதிர் புறம் உள்ள காமராஜர் சாலையை சென்றடைந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செங்கொடியுடன் அணி வகுத்தனர். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். வர வேற்புக்குழுவின் சிறப்பு தலைவர் ஏ.வாசுதேவன் வரவேற்றார்.சங்கத்தின் மூத்தத் தலைவர் டி.கே.ரங்கராஜன் முன்னாள் எம்பியின் ‘தொடர் ஓட்டம்’ ஆங்கில புத்தகத்தை அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் வெளியிட மருத்துவர் வி.சண்முகம் பெற்றுக்கொண்டார். தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தர ராஜன், இ.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உரை யாற்றினர். இம் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நிறைவடைகிறது.