districts

img

வாரிசுகளுக்கு பணி வழங்கக் கோரி வல்லூர் அனல் மின்நிலையத்தில் சிஐடியு தர்ணா!

திருவள்ளூர், பிப்.6- வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாரிசு களுக்கு பணி வழங்க வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு சார்பில் வியாழனன்று (பிப்.6) வல்லூர் அனல் மின் நிலை யம் நுழைவு வாயிலில்  முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியின் போது இறந்த தொழி லாளர்களின் குடும்பங்க ளுக்கு  வாரிசு வேலை வழங்க  கால தாமதம் செய்யக்கூடாது,   தொழிலாளர் ஆணையர் முன்பு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும், பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழி லாளர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஒரு நாள் முழுவதும் நடை பெற்ற தொடர் தர்ணா போராட்டத்தை சிஐடியு கிளை நிர்வாகி ஜெய வேல் துவக்கி வைத்தார். தொழிலாளர் சங்க செய லாளர் சதீஷ்  தலைமையில் மாநில துணைத் தலை வர் கே.விஜயன் சிறப்புரை யாற்றினார். இதில் சிஐடியு நிர்வாகிகள் சூரியபிரகாஷ், நாராயணன், பிரபாகரன், வடிவேல் முருகன், சாக்கர வர்த்தி, நாகலிங்கம், ராஜ்குமார், வெங்கட சுப்ரமணியம், சீனிவாசன், விக்னேஷ், ரமணா, தாஸ், சுதர்மணி மற்றும் வாரிசு வேலை கேட்டுள்ள குடும்பங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை மீஞ்சூர் பகுதி பொது தொழி லாளர்கள் சங்கத்தின்  செயலாளர் ஜி.வினாயக மூர்த்தி  நிறைவு செய்து பேசினார்.