சென்னை, செப்.4 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்க ளது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு முழுமை யான ஆலோசனைச் சேவைகளை கேன்ஸ்டாப் என்ற தன்னர்வ அமைப்பு வழங்கி வருகிறது. லாப நோக்கமற்ற இந்த அமைப்பு புற்று நோய் குறித்து இளம் தலை முறையினரிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் பரிசோதனை முகாம்களையும் நடத்தி வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களி டையே புற்றுநோய் விழிப்பு ணர்வை ஏற்படுத்த பள்ளி களுக்கிடையேயான போட்டியை 2001 ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி யில், சர்வதேச ரோட்டரி சங்கத்தின் 3234 கிளை சார்பில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கண்காட்சி துவக்க விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகி என்.எஸ். சரவணன், டாக்டர் ஜி. ஜே.மனோஹர், பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜெப தாஸ் தினகரன், கேன் ஸ்டாப் நிறுவனர் டாக்டர் விஜயா பாரதி ரங்கராஜன், ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக சூப்பர் சிங்கர் ஜூனியர் ஹிர்திக் சரி ரீ கமப லிட்டில் சாம்பியன் ஹர்ஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.