districts

சிதம்பரம் தொகுதியில் பாஜகவிற்கு ஆள் இல்லை: வெளியில் இருந்து ஆள்பிடிப்பு

சிதம்பரம், மார்ச் 23- தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது.  இதில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி போட்டியிடுகிறார்.  அதே போல் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டி யிடுகிறார். இவர்கள் இருவரும் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் சரியான ஆள் இல்லாததால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதப்படுத்தி வந்தனர்.  சிதம்பரம் தொகுதியில் பாஜக பட்டியல் சமூகத்தில் சரியான ஆள் இல்லை என வேலூரில் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினியை  வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.  இது கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. பாஜ கவுக்கு உள்ளுரில் ஒரு பட்டி யலின வேட்பாளர் கிடைக்க வில்லை.    பாஜக தலைவர் அண்ணா மலையின் சிபாரிசால் வேலூர் தொகுதியில் இருந்து  சிதம்பரம் தொகுதிக்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ளார் என்றும் அதே நேரத்தில் கடலூர். அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்க ளில் பட்டியல் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக பாடுபட்ட எவ்வ ளவோ உறுப்பினர்கள், தலைவர்கள் உள்ள னர். அவர்களை வேட்பாளராக அறிவித்தி ருக்கலாம்  ஆனால் அண்ணாமலை  ஏதோ கணக்கு போட்டு  அறிவித்துள்ளார். அவரது கணக்கு இங்கு செல்லாது என  கட்சியினர் பகிரங்கமாகே பேசி வரு கிறார்கள்.