திருவண்ணாமலை, டிச.13- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர பகுதியில் விளிம்பு நிலை யில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் பலரும் வாடகை வீடுகள் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி செய்யாறு வட்டாட்சி யரிடம், தமிழ்நாடு சிறு பான்மை நலக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது உரிய நட வடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி யளித்தார். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு ஏப்ரல் 10 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் செய்யாறு சாராட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அவரும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, விளிம்பு நிலை இஸ்லாமிய மக்கள் சிலரிடம் மட்டும் அதிகாரி கள் விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, வீட்டுமனைப் பட்டா இல்லாமல் தவிக்கும் விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்யக் கோரி செய்யாறு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதியை சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் அப்துல் காதர், ஷேக் இஸ்மாயில், ஷெரீப் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.