districts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை, அக். 19- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். அவர்களுக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் குமார், விஜய குமார், திருவள்ளூர் நத்தமேடு நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகி யோர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் தங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மூன்று பேரும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்றும், இவர்க ளுக்கு எதிராக குண்டர் தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், எனவே குற்றவாளிகள் 3 பேருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூன்று பேரின் ஜாமீன் மனுக்ககளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.