districts

img

தமிழ்நாட்டில் ஆகம கோவில்கள் இருக்கிறதா? வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் கேள்வி

சென்னை, செப். 2- தமிழ்நாட்டில் ஆகம கோவில்கள் இருக்கிறதா? என்று வழக்கறிஞர் சிகரம் செந்தில் நாதன் கேள்வி எழுப்பினார். “அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, உயர்நீதிமன்ற அண்மைக்காலத் தீர்ப்பு” என்ற தலைப்பில் சென்னை பெரி யார் திடலில் திராவிடர் கழக வழக்கறிஞர் அணி சார்பில் வியாழ னன்று (செப். 1) ஆய்வரங்கம் நடை பெற்றது. திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி பேசுகை யில், 3 சதவிகிதமாக இருக்கக் கூடியவர்கள், 97 சதவிகித மாக உள்ளவர்களை காலங்கால மாக எப்படி ஆண்டு கொண்டி ருக்கிறார்கள்? அதற்குத் தந்தி ரங்கள்தான் ஆயுதம். அந்தத் தந்திரங்கள்தான் அவர்களுடைய பலம். அதே தந்திரத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் புகுத்திக் கொண்டிருக் கிறார்கள். சமூக சீர்திருத்தமே கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது  உச்சநீதிமன்றத்தில் இதேபோன்ற வழக்கு விசார ணைக்கு வந்தபோது , நாத்தி கர்கள் அனைவரும் அர்ச்சகர் களாக்கி விட்டால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பப் பட்டபோது, அதற்கு பதில் அளித்த அப்போதைய அட்வகேட் ஜெனரல் அரசின் நடவடிக்கை சமூக சீர்திருத்தமே தவிர, மதச் சீர்திருத்தம் அல்ல என்று தெளி வாக எடுத்துரைத்தார். எனவே அப்போதே இந்த பிரச்சனை தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. இதில் குழப்பமே இல்லை என்றார் வீரமணி. வழக்கறிஞர் சிகரம் செந்தில் நாதன் பேசுகையில், ஒவ்வொரு முறை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்பு வரும் நேரத்தில் ஒருசிலர் எவ்வாறு தந்திரம் செய்கிறார்கள் என்பதை விளக்கினார். தற்போதைய தீர்ப்பில், ஆகமம் அல்லாத கோவில்களுக்கு மட்டுமே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை பொருந்தும் என்று சொல்வது மனிதவிரோத போக்கு என்று அவர் சாடினார்.

இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறானது என்று குறிப்பிட்ட அவர் ஆகம கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். டாக்டர் கானே, பார்த்தசாரதி பட்டாச்சாரியா ஆகியோரின் கருத்தை மேற்கோள் காட்டும் நீதிமன்றம், ஏன் ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன் குழுவின் அறிக்கையையும் மகாராஜன் குழுவின் அறிக்கையையும் எடுத்துக் கொள்ளவில்லை? நீதியரசர்.சொக்கலிங்கம் தலைமை யில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழு கோவிலுக்கு செல்லும்போது இதையெல்லாம் கணக்கில் கொண்டு, பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பதையும் அவர்  வலியுறுத்தினார். ஜனவரி முதல் நாளன்று  புத்தாண்டு கொண்டாடப்படும் எந்த கோவிலும் ஆகம கோவில் அல்ல என்று கூறி, வரிசையாக எதுவெல்லாம் ஆகம கோவில்கள் அல்ல என்பதை பட்டியலிட்டு, கடவுளை ஆரியமாக்குவதுதான் தமிழ்நாட்டில் நடந்தது, ஆரியத்தின் பிடியில் தமிழரின் மரபும் சமயமும் சிக்கிக் கொண்டது என்பதை சான்றுடன் விளக்கி, தமிழ்நாட்டில் ஆகம கோவில்களே தற்போது இல்லை. இதைத்தான் இந்த குழுவிடம் நாம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர் அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆகமத்தை விட அரசியல் சட்டம் பெரிது
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் பேசுகையில், 93 பக்கம் கொண்ட தீர்ப்பினைப் பக்கங்கள் வாரி யாக பிரித்தும், இதற்கு முன்னால் வழங்கப்பட்ட சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பு, ஆதிசிவாச்சாரியார் வழக்கின் தீர்ப்பு ஆகியவற்றையும், அதன் சாரம்சங்களை யும் கோடிட்டு காட்டி, இந்த வழக்கில் அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். உச்சநீதிமன்றத்தில் பெரும்பாலா னோர் ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்ற போது, இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்ப தற்கு தகுதியான இடமாக அது இல்லை. எனவே, மாநில அரசின் சார்பில் சட்டத்தி ருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆகமத்தை விட அரசியல் சட்டம் தான் பெரிது என்றும் அவர் நினைவு படுத்தினார். தற்போதைய தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்று குறிப்பிட்ட அரி பரந்தாமன் அனைத்து சாதியின ரும் அர்ச்சகர் ஆவதற்கு என்ன தகுதி என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாமே ஒழிய, அவர்களை உள்ளே அனுமதிப்ப தற்கு தடை விதிப்பது என்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று சாடினார்.

;