ராணிப்பேட்டை, ஏப். 9 – அரக்கோணம் மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத் ரட்சகன் அரக்கோணம், கலவை ஆகிய இடங்களில் கூட்டணி கட்சியினர் புடை சூழ வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது சிபிஎம் கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சென்னலேரி, மாந் தாங்கல், மேல்நெல்லி, மருதம், தட்டச்சேரி, சொரை யூர், மேலப்பழந்தை, வாழைப்பந்தல், மாம் பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உதயசூரிய னுக்கு வாக்குகேட்டு கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இதில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகு பதி, ம.கோவலன், கிளை செயலாளர்கள் ஆர். வசந்தி, என். சந்திரா, கே. சரவணன், ஆர்.தனசேகர், வட்டார குழு உறுப்பினர்கள் என். ஆதி மூலம், எஸ். விஜயா உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.