districts

img

குடியாத்தம் பகுதியில் மாம்பழச்சாறு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை

வேலூர். மார்ச் 28 - வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் து.மு.கதிர் ஆனந்த் குடி யாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள பரத ராமி, சாமிரெட்டிப்பல்லி, கல்லப்பாடி, ராமாலை, காளியம்மன் பட்டி, காந்திநகர், ஆர்.கொல்லப்பல்லி, சேங்குன்றம், தட்டப்பாறை, செருவங்கி, உள்ளி கூட்ரோடு, கூடநகரம், மேல்முட்டுகூர், தாழை யாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்விடுபட்ட அனை வருக்கும் தேர்தலுக்கு பின் கிடைக்க நட வடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசிடம் நெசவாளர் பூங்கா அமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு முதல்அமைச்ச ரின் நடவடிக்கையால் குடியாத்தம் பகுதி யில் நெசவாளர் பூங்கா அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளை கிறது. அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை யான மாம்பழச்சாறு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடி யாத்தம் பகுதிகளில் யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது. தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதை தடுக்க சூரியசக்தி மின் வேலி அமைக்க அதற்காக தமிழ்நாடு அரசுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனத்துறை சார்பில் இப்பகுதி யில் யானைகள் சரணாலயம் அமைக்க திட்டங்கள் தீட்டி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  பரதராமி பேருந்து நிலை யம் விரிவாக்கம் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார். வாக்கு சேகரிப்பின் போது குடி யாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், ஒன்றிய குழுத்தலைவர்கள் என்.இ.சத்யானந்தம், ரவிச்சந்திரன், கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சீத்தாராமன், குடியாத்தம் ஒன்றியக்குழு , ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர் ரவி, பிரதீஷ், அன்பரசன் மற்றும் குட்லவாரிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் உமாகாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

;