சென்னை,ஜன.8- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்க ளுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக் குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள் ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜனவரி 13 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
புதுவை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவா கியுள்ளது. புதுச்சேரியில் ஜனவரி யில் இதுவரை இல்லாத அளவு மழை பதிவாகியுள்ளது என்றும் பாலச்சந் திரன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் இயல்பை விட இந்த ஆண்டு 4 விழுக்காடு அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், காட்டு மன்னார் கோவில், சேத்தியாதோப்பு, புவன கிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நெய்வேலியில் பாதிப்பு நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப் பட்டது. ஆனால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை. ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட் டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.