districts

img

சமையல் எரிவாயு உருளையை நிரப்ப பயிற்சியற்றவர்களை பயன்படுத்துவதா? - மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு புகார்

கோவை, ஜூன் 28-  சமையல் எரிவாயு நிரப்பும் பணி யில் பயிற்சி இல்லாத தற்காலிக பணியாளர்களை பாரத் பெட்ரோலி யம் கார்ப்பரேசன்  நியமனம் செய் வதை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு-வினர் புகார்  அளித்தனர்.  கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு தமிழ்நாடு பெட்ரோலியம் அண்டு கேஸ் ஒர்க்கர்ஸ் சங்கத்தி னர் திங்களன்று அளித்த மனுவில்  கூறியுள்ளதாவது,  கோவை, பீள மேட்டில் பெட்ரோலியம் கார்ப்பரே சன் லிமிடெட் நிறுவனத்தில் எம்.டி. ஆர்.எஸ்.ஒப்பந்த நிறுவனத்தின் கீழ்  110 தொழிலாளர்கள் பணியாற்றி  வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுக ளாக பணியாற்றி வரும் இவர்கள் சமையல் எரிவாயு உருளையில் எரி வாயு நிரப்பும் பயிற்சியை முறை யாக பெற்று பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் இத்தொழிலா ளர்கள் சங்கம் அமைத்தார்கள் என் பதற்காக ஒப்பந்த நிறுவனம் 20க்கும்  மேற்பட்டவர்களை பணி நீக்கம் செய்தது. மதுரையிலுள்ள மண்டல பெட்ரோலிய நிறுவன ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து தொடர்ச்சியான போராட்ட அறிவிப் புக்கு பின்னரே 20 நாட்கள் கழித்து பணி நீக்கம் செய்தவர்களை மீண் டும் வேலைக்கு சேர்த்தது.  இந்நிலையில், சங்கத்தில்  இணைந்துள்ள பணியாளர்களை நீக்கிவிட்டு பயிற்சியில்லாதவர் களை பணியமர்த்த ஒப்பந்த நிறு வனம் முடிவு செய்துள்ளது. 20 க்கும்  மேற்பட்டவர்களை பணி நீக்கம் செய்திருந்த காலத்தில் தற்காலிக பணியாளர்களை கொண்டு எரி வாயு நிரப்பும் பணிகளில் ஈடுபடுத் தப்பட்டனர். தற்காலிக பணியாளர்க ளுக்கு எந்தவித பயிற்சியும் அளிக்க வில்லை. வீடுகளுக்கு அனுப்பப்ப டும் சமையல் எரிவாயு உருளை களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதற்கு உரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.  ஆனால், தற்காலிக பணியாளர் களுக்கு எந்தவித பயிற்சியும் அளிக் காமல் பணியில் ஈடுபடுத்துகின் றனர்.

இதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிக  பணியாளர்களை பணிக்கு அமர்த்தி விட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழி லாளர்களை வெளியேற்ற ஒப்பந்த தார நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பெட்ரோலிய கார்ப்பரேசன் நிறுவனமும் துணையாக உள்ளது. எனவே, சமையல் எரிவாயு நிரப்பும் பணிக்கு தற்காலிக பணியாளர்கள் நியமிக்கவுள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒப் பந்த பணியாளர்களுக்கு சட்டப்பூர் வமான அடிப்படை சலுகைகளை ஒப்பந்ததார நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். மேலும், தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக உடன்பாடு ஏற்பட பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கும், ஒப் பந்ததாரருக்கும் அறிவுறுத்த வேண் டும். நிறுவனத்தில் ஏற்படும் காலிப்  பணியிடங்களை உள்ளூர் ஆட் களை வைத்து நிரப்ப வேண்டும். தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் நிர்வாகத்தின் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எரிவாயு உருளையில் எரி வாயு நிரப்ப பயிற்சியற்ற தொழிலா ளிகளை பயன்படுத்தியது குறித்து தொழிலாளர் துறை தலையிட்டு  உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.  முன்னதாக, மாவட்ட ஆட்சியரி டம் சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பாரத் பெட்ரோல் கார்ப்ரேசனில் பணியாற்றும் ஏரா ளமான ஒப்பந்த தொழிலாளிகள் பங் கேற்று மனு அளித்தனர்.

;