திருப்பூர், செப்.4- போக்குவரத்து தொழிலாளர் களின் கோரிக்கையை அரசு செவி சாய்க்காவிட்டால், போராட்டத்தின் வடிவம் மாறும் என சிஐடியு மாநி லத் தலைவர் அ.சவுந்திரராசன் திருப்பூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வரும் போராட் டத்தில் தெரிவித்தார். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதி யர்கள் அடிப்படை கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் காங்கேயம் சாலை அரசுப் போக்குவரத்துக்கழக திருப்பூர் மண் டல அலுவலகம் முன்பு தொடர்ந்து நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டம் 17 ஆவது நாளாக புதனன்று தொடர்ந்தது. 17 ஆவது நாளான புதனன்று அரசு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டலத் தலைவர் செல்லதுரை தலைமையில் நடை பெற்றது. மாநில பொதுச்செயலா ளர் ஆறுமுக நயினார் துவக்கி வைத் தார். ஓய்யு பெற்ற நல அமைப்பின் என்.சுப்ரமணியம் வாழ்த்தி பேசி னார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திராசன் சிறப்புரையாற்றி னார். இதில், அ.சவுந்திரராசன் பேசு கையில், தொழிலாளர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றி தன்னிடம் இருந்து பிடிக்கப்பட்ட பணத்தை கேட்டு போராடும் நிலை உள்ளது. 25 மாதங்களாக ஓய்வு பெற்றோருக்கு பணப் பலன் வழங் கப்படவில்லை. ஓய்வு பெற்ற ஊழி யர்களுக்கு வழங்க வேண்டிய டி.ஏ. மற்றும் பண பலன்களை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து, ஆக.18 ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்தது. இதனைய டுத்து, 10 மாத ஓய்வுக்கால பலன் வழங்கப்படும் என அரசு அறிவித் தது. 1998 ஆம் ஆண்டு போக்குவ ரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்தம் மூலம் ஓய்வூதியத் திட்டம் உரு வாக்கப்பட்டது. ஆனால், 2003க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது என அதிமுக ஆட்சியில் அர சாணை வெளியிடப்பட்டது. போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதை கேட்டு தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று போக்குவரத்து ஊழியர் பெறும் நலத்திட்டங்கள் அனைத்தும் பல கட்ட போராட்டங்களுக்கு பின் கிடைத்தது தான். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை எப் போது நிறைவேற்றப்படும் என தேதியை குறிப்பிடுங்கள். இல்லா விட்டால் போராட்டத்தின் வடிவம் மாறும் என்றார்.
கோவை
இதேபோன்று, 18 ஆவது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் வியாழனன்று நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக கோவை அரசு போக்குவரத்து சுங்கம் பணி மனை முன்பு கோவை அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெறறோர் நல அமைப்பு சார் பில் நடைபெறும் போராட்டத்தில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன மாநில பொதுச் செய லாளர் ஆறுமுக நயினார் பங்கேற்று பேசுகையில், போக்குவரத்து துறையில் வேலை செய்யும் அதி காரிகள், ஊழியர்களின் சிரமங் களை புரிந்து கொள்வதில்லை. அதிகாரிகள் எவ்வளவு நாட்க ளுக்கு அதிகாரிகளாக இருப்பார் கள் ஓய்வுக்கு பிறகு தான் அவர் களுக்கு புத்தி வருகிறது. செஸ் விளையாட்டில் விளையாடும் போது தான் இது ராஜா, ராணி, மந் திரி என்று சொல்வார்கள். விளை யாடி முடித்ததும் அந்த காய்களை எடுத்து பெட்டியில் போட்டு விடு வார்கள். அதுபோலதான் பணியின் போது தான் அதிகாரிகள், ஓய்வு பெற்ற பின்பு அவர்களுக்கு மதிப்பு இருப்பதில்லை. அதை அவர்கள் பணியின் போது உணர்வதில்லை. போக்குவரத்து ஊழியர்களின் நலன்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. தற்போது அரசு ஊழியர்க ளுக்கு நிகர சம்பளம் மட்டுமே கொடுத்து வருகிறார்கள். ஆனால் மொத்த சம்பளம் பணம் தரும் போது தான் கிராஜிவிட்டி, பிஎஃப் டிரஸ்டுகளுக்கு பணம் போய் சேரும். அப்போதுதான் நமக்கு ஓய்வு பெற்ற உடனே பணப்பலன் கள் கிடைக்கும். ஓய்வு பெற்ற ஊழி யர்களுக்கு அரசு தர வேண்டிய பாக்கி பணத்தை உடனடியாக தரு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார். இதில், சம்மேளன துணை பொதுச் செயலாளர் எம். கனகராஜ், மாவட்டத் தலைவர் லட்சுமி நாரா யணன், மாவட்டச் செயலாளர் வேளாங்கண்ணி ராஜ், மாவட்டப் பொருளாளர் மகேஷ்குமார் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சுரேந்தி ரன், அருணகிரிநாதன் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூ தியர்கள் திரளாக பங்கேற்றனர். ஈரோடு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வூதி யர்கள் நடத்தும் 18 ஆம் நாளாக ஈரோடு மண்டல தலைமை அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. மண்டலத் தலைவர் எஸ்.இளங்கோ மற்றும் ஓய்வூதியர் அமைப்பின் மண்டலத் தலைவர் பி.ஜெகநாதன் ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், சம்மேளன பொதுச் செயலாளர் ஆறு முக நயினார் பங்கேற்று சிறப்புரை யாற்றினார். மண்டல பொது செய லாளர் டி.ஜான்சன் கென்னடி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.