districts

img

தாராபுரத்தில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்

 தாராபுரம்,  ஜூன் 29 - தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளைப் அமைச்சர் துவக்கி வைத்தார். தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் சிறுபாலங் கள், மழைநீர் வடிகால் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்தல்  உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை  அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  அடிகள் நட்டு பணிகளை துவங்கி வைத்தார். வளர்ச்சி பணிகளுக்காக காமராஜபுரம்,  இறைச்சி மஸ்தான் தெரு, பூளவாடி சாலை, நாடார் தெரு   மணியம்மை நகர், சித்தராவுத்தன்பாளையம், நாச்சிமுத்து புதூர்  ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான நிதி  ரூ.51 லட்சத்தை தாராபுரம்  சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு  நிதியில் ஒதுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் நகராட்சி  தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித்தார்.  நகராட்சி  ஆணையர் ராமர், நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், நக ராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி வார்டு  உறுப்பினர்கள் ராஜேந்திரன், துரை சந்திரசேகர், சக்திவேல்,  ஹைடெக் அன்பழகன், மலர்விழி கணேசன்,  ராசாத்தி பாண்டி யன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;