தருமபுரி, செப்.4- புறம்போக்கு நிலத்தின் வழி யாக சாலை அமைக்க, 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத் தும் நடவடிக்கை எடுக்காத தால், சேறும் சகதியுமான வழித் தடத்தால் அப்பகுதி பொதுமக் கள் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், பாப்பா ரப்பட்டி பேரூராட்சி, 3 ஆவது வார்டுக்குட்பட்ட சின்னான்திட்டு பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள், வேப்பனஹள்ளி ஊராட்சிக்கு செல்லும் சாலையிலிருந்து, பாப்பாரப்பட்டி வாரச்சந் தைக்கு செல்லும் மேய்ச்சல் புறம்போக்கு வழித்தடத்தை பல ஆண்டுகளாக பயன்ப டுத்தி வந்தனர். இதில் தனிநபர்கள் ஆக்கிர மிப்பால், பொது வழித்தடத்திற்கு பாதிப்பு ஏற் பட்டது. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறுகையில், எங்கள் பகுதி மக்களுக்கு அவசர தேவை மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சாலை வசதி இல்லாத நிலையில், குறுகிய அளவிலான வழித்தடத்தை மட்டும் பயன்ப டுத்தி வந்தோம். தற்போது மழையால் அது வும் சேறும் சகதியுமாக மாறியது. அரசு புறம் போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், தனிநபர் முறைகேடாக செய்த பட்டாவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மேச்சல் புறம்போக்கு நிலத்தின் வழி யாக 300 மீட்டருக்கு சாலை அமைக்க, 30 ஆண்டுகளாக வலியுறுத்தி பென்னாகரம் வட்டாட்சியர், பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரி களிடம் பலமுறை மனு அளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. இதனால், வேறு வழியின்றி சேறும் சகதியுமான வழித்தடத் தில், கிரவல் மண் கொட்டி சீர் செய்யும் பணி யில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, அரசு அதி காரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலை அமைத்துத்தர வேண்டும், என்றார்.