districts

img

பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு

பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், இனவெறி இஸ்ரேலைக் கண்டித்தும் சேலம் தலைமை அஞ்சலகம் முன்பு சனியன்று என்சிசிபிஏ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐபிஆர்பிஏ மாவட்டச் செயலாளர் டி.நேதாஜிசுபாஷ் தலைமை வகித்தார். இதில், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜ்குமார், என்சிசிபிஏ மாவட்டச் செயலாளர் என்.சண்முகம், எல்ஐசி ஓய்வூதியர் அமைப்பின் ஆர்.தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் எம்.ஜெயபால் நிறைவுரையாற்றினார்.