districts

img

அவிநாசியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சேவூர் சாலை, பழைய பேருந்து நிலையம்

அவிநாசியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சேவூர் சாலை, பழைய பேருந்து நிலையம், திருப்பூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் கட்சி நிதி வசூல் இயக்கம் நடைபெற்றது. இதில், சிபிஎம் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், சிஐடியு விசைத் தறி தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.முத்துசாமி,  ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழுக்  உறுப்பினர்  எஸ்.வெங்கடாசலம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில்,  இரண்டரை மணிநேரத்தில், ரூ.38 ஆயிரத்து 250  வசூலிக்கப் பட்டது.

;