districts

img

சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு

சேலம், ஏப்.1- சாலை விபத்து குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் சேலத்தில் நடைபெற்றது. சாலையில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது மற்றும் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோனா கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்து குறித்து நடனமாடியும், நாடகத்தின் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவ மாணவியரின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.